ஆந்திர மாநிலம் காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 42 நாட்களில் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கோயில் வளாகத்தில் உள்ள உண்டியலில் தங்கள் காணிக்கைகளை செலுத்தியப் பணத்தை கடந்த 23.3.2022 ,24.3.2023 ஆகிய இரண்டு நாட்களில் கோயில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி. ராஜு மற்றும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு முன்னிலையில் கணக்கிடப்பட்டது .இதில் பணமாக 2 கோடியே 57 லட்சத்து 4 ஆயிரத்து 861 ரூபாய் ரொக்கப் படமாகவும், தங்கம : 225.300 கிராம், வெள்ளி :860 கிலோ, வெளிநாட்டுப் பணம் 113 டாலர்கள் இருந்ததாக கோயில் நிர்வாக அதிகாரி தெரியப்படுத்தினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையில் கடந்த 40 நாட்களில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவம் 13 நாட்கள் வெகு விமரிசையாக நடந்த சமயத்தில் கோயிலில் தினந்தோறும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்தனர். குறிப்பாக மகாசிவராத்திரி 1.3.22 அன்று மகா சிவராத்திரியையொட்டி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்த சமயத்தில் தங்களின் காணிக்கைகளை செலுத்தினர் .இதனால் கோயில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் இரண்டரை கோடி ரூபாய் வருமானத்தை கடந்தது குறிப்பிடத்தக்கது.