தஞ்சாக்கூர் தவக்கோல சிவன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2022 06:03
மானாமதுரை: மானாமதுரை அருகே தஞ்சாக்கூரில் தவக் கோலத்தில் உள்ள சிவன் சிலையையும், ராகு-கேது சன்னதிகளிலும் ஏராளமான வட மாநில பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மானாமதுரை அருகே உள்ள தஞ்சாக்கூரில் ஜெயம் பெருமாள்,பாலசுப்பிரமணியர், ஜெகதீஸ்வரர்-திரிபுரசுந்தரி அம்மன், 18சித்தர்கள்,தெப்பக்குளத்திற்குள் ராகு-கேது சன்னதிகள் அடங்கிய கோயில்கள் ஒரே வளாகத்தில் அமையப்பெற்றுள்ளன.இக்கோயிலுக்கு மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் சாமி தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர்.இந்நிலையில் ராமேஸ்வரத்திற்கு சென்ற ஏராளமான வட மாநில பக்தர்கள் தஞ்சாக்கூரில் தவக்கோலத்தில் சிவன் சிலையும் தெப்பக்குளத்திற்குள் ராகு,கேது சன்னதிகளும் இருப்பதை கேள்விப்பட்டு தஞ்சாக்கூருக்கு சாமி தரிசனத்திற்காக வந்தனர்.அவர்களை கோயில் பூசாரி பாலசுப்பிரமணியம் வரவேற்று சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளை நடத்தினார். இதனைத்தொடர்ந்து ஏராளமான வட மாநில பக்தர்கள் சாமி தரிசனம் செய்த பின்பு ராமேஸ்வரத்திற்கு புறப்பட்டு சென்றனர். வடமாநிலங்களிலிருந்து சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.