செஞ்சி:மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் உண்டியலில் 245 கிராம் தங்க நகைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் உண்டி யல் எண்ணும் பணி நடந்தது.இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர்கள் ஜோதி, பரணிதரன் முன் னிலையில் இப்பணி நடந்தது. இதில் 29 லட்சத்து 60 ஆயிரத்து 589 ரூபாய் ரொக்கம், 245 கிராம் தங்க நகைகள், 230 கிராம் வெள்ளி நகைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத் தியிருந்தனர்.கோவில் அலுவலக மேலாளர் முனியப்பன், ஆய்வாளர் முருகேசன், அறங்காவலர் குழுவினர் மற்றும் கோவில் பணியா ளர்கள் உடன் இருந்தனர்.