கடலுார், ; கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. கடலுார் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
மாலை 4:00 மணிக்கு சுவாமி, அம்மன் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர்,சி.என்.பாளையம் மலையாண்டவர் என்ற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர், மீனாட்சியம்மன் சமேத சொக்கநாதர் ஆகிய கோவில்களில் நேற்று பிரதோஷ பூஜை நடந்தது. விநாயகர், நந்தி, ஈஸ்வரர், அம்மன், பிரதோஷ நாயகர் ஆகிய சுவாமிகளுக்கு நேற்று மாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில் நந்திபகவானுக்கு அபிஷேகம் நடந்தது.பூஜைகளை குமார், ஹரிபிரபு குருக்கள் செய்தனர். உற்சவர் புவனாம்பிகை சமேதராய் பூலோகநாதர் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார். கைலாசநாதர், நடனபாதேஸ்வரர், திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர், எய்தனுார் ஆதிபுரீஸ்வரர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.