பதிவு செய்த நாள்
31
மார்
2022
02:03
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே, உலக சமாதானம் வேண்டி பஞ்சாக்கினி தவம் நிகழ்ச்சி நடந்தது.
அருப்புக்கோட்டை அருகே சவ்வாஸ்புரத்தில், ஸ்ரீ பாலா சமஸ்தானம் பாபாஜி பீடம் கோயிலில், உலக சமாதானம் வேண்டியும், விவசாயம் செழிக்கவும், நீராதாரங்கள் மேம்படவும், வரவிருக்கும் வசந்த நவராத்திரியை முன்னிட்டும், பஞ்சாக்கினி தவம் செய்யப்பட்டது . சென்னை அம்பத்தூர் யோகமாயா புவனேஸ்வரி பீடாதிபதி பரமஹம்ச பரத்வாஜ் சுவாமிகள் பஞ்சாக்கினி தவமிருந்தார். பஞ்சபூத சக்திகள் வலுப்பெற, நான்கு பக்கமும் அக்னி மூட்டப்பட்டு, தெய்வங்களை பிரதிஷ்டை செய்து, மேலே சூரியனை ஐந்தாவது அக்னியாக கொண்டு, ஸ்ரீ வாராஹி அம்மனை ஜெபித்தும், பாலாதிரிபுரசுந்தரி வேண்டியும், பஞ்சாக்கினி தவம் செய்தார். சுவாமிகள் 16 ஆயிரம் கோடி முறை ஸ்ரீ பாலா ஜெபம் செய்து, அதனை சில வாரங்களுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சமர்ப்பணம் செய்துள்ளார். சுவாமிகள் கூறியதாவது, " கிராமங்களே இந்தியாவின் ஆதார் விவசாயம் செழிக்க வேண்டும். நீர்நிலைகள் பெருக வேண்டும். எங்கும் வறட்சியாக தான் உள்ளது. கிராமங்களை தேர்ந்தெடுத்து, இங்கு வந்து இதுபோன்று தியானம் செய்தால், கிராமங்களுக்கு புண்ணியம் கிடைக்கும். உலகம் சமாதானம் அடையும். என்று கூறினார். ஏற்பாடுகளை ஸ்ரீ பாலா - பாபாஜி பக்தர்கள் செய்தனர். அன்னதானம் நடந்தது.