ஸ்ரீ காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் வரும் 2.4 .2022 அன்று தெலுங்கு (புத்தாண்டை)யுகாதியை யொட்டி ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் காலை 9 மணிக்கு ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் மூலவர் சந்நிதி அருகில் ஞானப்பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படும். அதனைத் தொடர்ந்து மாலை 4 மணி முதல் புத்தாண்டின் பஞ்சங்க ஸ்ரவனம் (படித்தல்)நடைபெறும். மேலும் இரவு 9 மணிக்கு ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் சிம்மாசனத்திலும் ,ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சப்பரத்திலும் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். முன்னதாக காலை 8.30 மணிக்கு பக்த கண்ணப்பருக்கு சிவன் கோயில் சார்பில் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்படும். இரவு 7 மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள கோட்ட மண்டபம் அருகில் ஸ்ரீ மேடசானி. மோகன் அவர்கள் தலைமையில் (கவி சம்மேளனம்) கவிஞர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. என்று கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரிவித்தார்.