ஜம்மு - காஷ்மீரில் மூன்று முக விஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டள்ளது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2022 11:04
ஸ்ரீநகர்-ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், ஒன்பதாம் நுாற்றாண்டைச் சேர்ந்த மூன்று முகம் கொண்ட விஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது.
ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஜீலம் ஆற்றில், நேற்று மணல் அள்ளும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஒரு சிலை கிடைத்தது. அதை சுத்தம் செய்து பார்த்த போது, அது மூன்று முகம் கொண்ட விஷ்ணு சிலை என்பது தெரிய வந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார், அந்த சிலையை ஸ்ரீநகரில் உள்ள தொல்லியல் துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அதை ஆய்வு செய்த தொல்லியல் வல்லுனர்கள், ஒன்பதாம் நுாற்றாண்டைச் சேர்ந்த அரிய வகை சிலை என்றனர்.