புதுச்சத்திரம் அங்காளம்மன் கோவிலில் மயானகொள்ளை திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2022 03:04
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த சம்மந்தம் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை திருவிழா நடந்தது. அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழா கடந்த 27 ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 30 ம் தேதி இரவு 9 மணிக்கு தாய் வீட்டு சீதனம் வழங்குதல், இரவு 12 மணிக்கு இருளமுகம் நடந்தது. சிறப்பு விழாவான மயானக்கொள்ளை உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. அதையொட்டி அன்று காலை 10.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 6.30 மணிக்கு மயானக்கொள்ளை திருவிழா நடந்தது. ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.