Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு ... சிவன்மலை உத்தரவு பெட்டியில் போகர் சித்தர் படம்: என்ன நடக்கும்? சிவன்மலை உத்தரவு பெட்டியில் போகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏப்.,14ல் மீனாட்சி திருக்கல்யாணம்: ஆன்லைன் கட்டணம் செலுத்தி நேரில் தரிசிக்கலாம்!
எழுத்தின் அளவு:
ஏப்.,14ல் மீனாட்சி திருக்கல்யாணம்: ஆன்லைன் கட்டணம் செலுத்தி நேரில் தரிசிக்கலாம்!

பதிவு செய்த நாள்

02 ஏப்
2022
08:04

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், ஏப்., 14ல் நடைபெற உள்ளது. இதை காண, பக்தர்கள் ஆன்லைன் வாயிலாக கட்டணம் செலுத்தி, நேரில் தரிசிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச அனுமதியும் உண்டு. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா, ஏப்., 5ல் துவங்கி, 16 வரை நடக்கிறது. விழா வின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம், ஏப்., 14, தமிழ் புத்தாண்டு தினத்தன்று நடைபெற உள்ளது. திருக்கல்யாண உற்சவத்தை காண பக்தர்களுக்கு 200, 500 ரூபாய் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 200 ரூபாய் கட்டணத்தில், அதிகபட்சம் 3 பேருக்கும், 500 கட்டணத்தில் அதிகபட்சம் 2 பேரும் அனுமதிக்கப்படுவர்.

மேலும், 12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டண சீட்டு பெற வேண்டும். குறிப்பாக, 500 ரூபாய் கட்டண சீட்டு 2,500 பேருக்கும், 200 ரூபாய் கட்டண சீட்டு 3,200 பேருக்கும் மட்டுமே வழங்கப்பட உள்ளன. ஒரே நபர் இரண்டு கட்டண சீட்டிற்கு விண் ணப்பிக்க முடியாது. கோவில் இணைய தளத்தில் www.maduraimeenakshi.org ஏப்., 4 முதல் ஏப்.,7 வரை தரிசனத்திற்கு முன்பதிவு செய்யலாம். அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை பதிவேற்றப்பட வேண்டும். மொபைல் போன் எண், இ - மெயில் முகவரி கட்டாயம் தேவை. பிறந்த தேதி சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். ஆன்லைன் விண்ணப்பத்தில், மார்பளவு போட்டோ இணைக்க வேண்டும். ஒரு பதிவிற்கு ஒரு மொபைல் போன் எண் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அதிக விண்ணப்பங்கள் வந்தால், கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்து, சம்பந்தப்பட்டோருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். மொபைல் போன் எண் தெரிவிக்காதவர்கள் அறியும் வண்ணம், கோவில் அலுவலக அறிவிப்பு பலகையில், ஏப்., 8 காலை 11:00 மணிக்கு அறிவிப்பு ஒட்டப்படும் .கட்டண சீட்டு ஒதுக்கீடு பெற்ற விபரம் கிடைத்த 24 மணி நேரத்திற்குள், ஆன்லைனில் பதிவு செய்து, கட்டண சீட்டு தொகையை செலுத்தி உறுதி செய்து கொள்ள வேண்டும். இல்லாதபட்சத்தில் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும். ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை செய்து வருகின்றனர்.

எந்த கட்டணத்திற்கு என்ன வாசல்?

திருக்கல்யாணம் ஏப்., 14ல் காலை 10:35 மணிமுதல் 10:59 மணிக்குள் நடக்கிறது. கட்டண சீட்டு பெற்றவர்கள், காலை 9:00 மணி வரை மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.இதில், 500 ரூபாய் கட்டண சீட்டு பெற்றவர்கள், வடக்கு கோபுரம் முனீஸ்வர சன்னிதி ஒட்டிய வழியிலும், 200 ரூபாய் கட்டண சீட்டு பெற்றவர்கள் ராஜகோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்படுவர். திருக்கல்யாணத்தை இலவசமாக காண விரும்பும் பக்தர்கள், தெற்கு கோபுரம் வழியாக முன்னுரிமை அடிப்படையில் இடத்திற்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர். விழாவிற்கு வரும் பக்தர்கள் கட்டணம் செலுத்தி தங்க, கோவிலின் பிர்லா மந்திர் விடுதியில் நேரடி முன்பதிவு வசதியும் உண்டு.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடந்த கிருத்திகை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வேகவதி ஆற்றங்கரையோரம், 16ம் நுாற்றாண்டின் விஜயநகரப் பேரரசு கால சதிகல் சிற்பம் ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், மங்கள வேல் வழிபாடு நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பல்லி சிலைகள் மாற்ற முயற்சி நடப்பதாக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பணாமுடீஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகளால் சிற்பங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar