பதிவு செய்த நாள்
02
ஏப்
2022
07:04
காளஹஸ்தி: சித்தூர் காளஹஸ்தி சிவன் கோயிலில் (உகாதி) தெலுங்கு புத்தாண்டையொட்டி கோயில் வளாகத்தில் உள்ள தங்க கொடி மரம் எதிரில் உற்சவ மூர்த்திகளை அமர்த்தி கோயில் அர்ச்சகர்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.முன்னதாக கலசத்தை ஏற்பாடு செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர் அதனைத் தொடர்ந்து அதில் உள்ள புனித நீரினால் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கும் ஞானப் பிரசுனாம்பிகை தாயாருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது.. மஞ்சள், குங்குமம், விபூதி, இளநீர், பால்,தயிர், நெய் ,சந்தனம், பஞ்சாமிர்தம் போன்ற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தினர்.இதனைத் தொடர்ந்து மாலை 5 மணி முதல் கோயில் வேதப் பண்டிதர்களால் (தெலுங்கு) புத்தாண்டின் பஞ்சங்க ஸ்ரவனம் (படித்தல்) நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தம்பதியினர், கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக.சீனிவாசுலு, அறங்காவல் குழு உறுப்பினர்கள் கோயில் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.