பெரியகுளம்: பெரியகுளத்தில் ஆதி வராக நதீஸ்வரர் கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பெரியகுளம் வராக நதி கணபதி மற்றும் ஆதி வராக நதீஸ்வரர் கோயில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேகம் நடந்தது. தினமும் இரு கால பூஜையும், பவுர்ணமி அமாவாசை விசேஷ நாட்களில் மூன்று கால பூஜை நடக்கும். வருஷாபிஷேக பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏப், மே, ஜூன் மாதங்களில் ஆதி வராக நதீஸ்வரர் மேற்புறம் செம்பில் தண்ணீர் ஊற்றி சொட்டு சொட்டாக சிவன் மீது தண்ணீர் விழுமாறு அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர். இதனால் சுவாமியின் மனம் குளிர்வதைப்போல், பக்தர்களுக்கும் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.