பதிவு செய்த நாள்
03
ஏப்
2022
01:04
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே சண்முகசுந்தர புரத்தில் ஸ்ரீ மகா கணபதி, கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பழமையான கோயில் சீரமைப்பு பணிகளுக்குப் பின் நேற்று முன்தினம் துவங்கிய கும்பாபிஷேகப் பணிகளில் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கோபுர கலச பிரதிஷ்டை, பூர்ணாஹுதி நிகழ்ச்சிக்கு பின் மகாதீபாராதனை நடந்தது. 2ம் நாள் நிகழ்ச்சி கோ பூஜையுடன் துவங்கி திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை சாற்றுமுறை, ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஜனம், யாத்ரா தானம், கடம் புறப்பாடு நிகழ்ச்சிகளுக்குப் பின் ஸ்ரீ மகா கணபதி, ஸ்ரீ கன்னிமார் கோயில் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம் சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை ஊர் நாட்டாமை ரத்தினவேல், மற்றும் சின்ன நாட்டாமை சௌந்தரராஜன் உட்பட விழாக்குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.