Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் பங்குனி கார்த்திகை: தங்க ... ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் சி.சி.டி.வி., கேமராக்கள் பழுது ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவி கருமாரியம்மன் கோவில் ஆண்டு விழா
எழுத்தின் அளவு:
தேவி கருமாரியம்மன் கோவில் ஆண்டு விழா

பதிவு செய்த நாள்

05 ஏப்
2022
08:04

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, தேவி கருமாரியம்மன் கோவிலில், 31வது ஆண்டு விழா நடைபெற்று வருகிறது.

மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள, சக்தி விநாயகர் கோவிலில், வெள்ளிங்கிரி ஆண்டவர், தேவி கருமாரியம்மன் ஆகிய சன்னதிகள் உள்ளன. வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலின், 48வது ஆண்டு துவக்க விழாவும், தேவி கருமாரியம்மன் கோவிலின், 31வது ஆண்டு விழாவும் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம், 29ம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. அன்று இரவு அக்னி கம்பம் நடப்பட்டது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை செய்யப்படுகிறது. நேற்று சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று மாலை பவானி ஆற்றிலிருந்து கரகம் எடுத்து, அன்னபூரணி பேட்டை வழியாக அம்மன் சுவாமியை அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 6ம் தேதி காலை அம்மன் திருவீதி உலாவும், மாவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. 8ம் தேதி காலை சக்தி விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட உள்ளது. 13ம் தேதி காலை நடூர் மாரியம்மன் கோவிலில் இருந்து, திரிசூலம் எடுத்து தாரை தப்பட்டை முழங்க, சிவபெருமான் படி விளையாடி வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து இரவு சிவபெருமான் அழைப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 14ம் தேதி தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு, விசேஷ பூஜைகள் மதியம் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. 15ம் தேதி வெள்ளியங்கிரி மலைக்கு புறப்படுதலும், 16ம் தேதி பூண்டி மலை அடிவாரத்தில் அபிஷேக பூஜையும், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 17ம் தேதி மறுபூஜை நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.வில்லியனுாரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar