Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகிலேயே உயரமான முருகன் சிலை ... அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.1.24 கோடி உண்டியல் காணிக்கை அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.1.24 கோடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி தேரோட்டம்

பதிவு செய்த நாள்

07 ஏப்
2022
08:04

தாயமங்கலம்: இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் தேரோட்ட விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா வருடந்தோறும் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இந்த விழாவில் மதுரை,அருப்புக்கோட்டை,விருதுநகர், சிவகங்கை,மானாமதுரை,இளையான்குடி, காரைக்குடி,திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வழிபட்டு செல்வது வழக்கம்.இந்தாண்டுக்கான பங்குனி பொங்கல் விழா கடந்த மாதம் 29ம் தேதி இரவு 11:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழாவான நேற்று முன்தினம் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த பக்தர்கள் பொங்கல் வைத்தும், தீச்சட்டி,மாவிளக்கு,கரும்பாலை தொட்டில், உருண்டு கொடுத்தல், மொட்டை எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை செலுத்தியும், ஆடு,கோழிகளை பலியிட்டும் அம்மனை வேண்டினர்.நேற்று மாலை நடைபெற்ற மின்விளக்கு அலங்கார தேரோட்டத்திற்காக அலங்கரிப்பாள் ட உற்சவர் அம்மன் தேருக்கு எழுந்தருளிய பின்னர் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர்.தேர் 4 ரத வீதிகளிலும் வலம் வந்த பின்னர் நிலையை அடைந்தது.பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ., மதியரசன், கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் தமிழரசன்,தி.மு.க.,விவசாய அணி ஒன்றிய செயலாளர் ராஜபாண்டி, ஒப்பந்ததாரர் ஜெயராமன்,அ.தி.மு.க.,அய்யாச்சாமி,ஜ.டி.,விங்க் மாவட்ட பொருளாளர் கனகராஜ்,ஒன்றிய கவுன்சிலர் கீர்த்தனா உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar