கோட்டையூர் வேலங்குடி பெரியநாயகி அம்மன் கோயில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2022 03:04
காரைக்குடி: கோட்டையூர் வேலங்குடி பெரியநாயகி அம்மன் கோயில் ஏழூர்செவ்வாய் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு ஊர் பிள்ளையார் கூடத்திலிருந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி தொடங்கி வயல்நாச்சியம்மன் கோயிலை சென்றடைந்தது. கோட்டையூர், வேலங்குடி, மனச்சை, வடகுடி, பள்ளத்தூர், கண்டனூர், பாலையூர், கொத்தரி ஆகிய ஊர்களில் இருந்து மக்கள் வயல் நாச்சியம்மனுக்கு மதுக்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து நேற்று காலை, பெரியநாயகி அம்மன் தேர் வயல் நாச்சியம்ம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டு வேலங்குடி தேரோடும் வீதி வழியாக வந்து மதியம் தேர் நிலையை அடைந்தது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.