பதிவு செய்த நாள்
07
ஏப்
2022
05:04
சென்னை:அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, 163 கோவில்களில், இடிதாங்கிகள் பொறுத்தும் பணி நடந்து வருகிறது, என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:திருத்தணி, திருச்செங்கோடு, திருச்சி மலைக்கோட்டை, திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் ஆகிய ஐந்து மலைக் கோவில்களில், கம்பி வட ஊர்தி வசதி அமைக்க, தொழில்நுட்ப வல்லுனர் குழுவினரால் சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டுள்ளன.சோளிங்கர், அய்யர் மலை ஆகிய மலைக் கோவில்களில், புதிய ரோப் கார் வெள்ளோட்டம் விரைவில் நடைபெற இருக்கிறது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், சித்திரை பெருவிழா சிறப்பான முறையில் நடைபெற, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கோவில் கோபுரங்களில் பொருத்தப்பட்டுள்ள இடிதாங்கிகள் ஆய்வு செய்யப்பட்டு புதுப்பிக்கப்படும். புதிதாக, ஒன்பது கோவில்களில் இடிதாங்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், 163க்கும் மேற்பட்ட கோவில்களில், இப்பணிகள் நடந்து வருகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.