கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2022 09:04
ஆண்டிபட்டி: ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்று நடந்தது. பழமையான இக்கோயிலில் யாகசாலை பூஜைகளுக்கு பின் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதனைத்தொடர்ந்து சக்கரத்தாழ்வார் எதிர் சேவை செய்ய கருடாழ்வார் உருவம் பொறிக்கப்பட்ட கொடி கோயிலை சுற்றி கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு பூஜை செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. விழாவில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏப்ரல் 14ல் திருக்கல்யாணம், ஏப்ரல் 16ல் சுவாமி திருத்தேரில் எழுந்தருளல், ஏப்ரல் 17, 18 இரு நாட்கள் தேரோட்டம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தங்கலதா, தக்கார் வைரவன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.