விக்ரமங்கலம்: விக்கிரமங்கலம் அருகே பானமூப்பன்பட்டி மந்தையம்மன் கோயில் பங்குனி திருவிழா 5 நாட்கள் நடந்தது. அம்மனுக்கு கரகம், முளைப்பாரி எடுத்து ஊர்வலம் சென்றனர். காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் மாவிளக்கு, அங்கபிரதட்சணம், அக்னிச்சட்டி, சேத்தாண்டி வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் மூன்று நாட்கள் நடந்த மகாவிந்தை எனும் தர்மர் நாடகத்தில் கிராம மக்களே கதாபாத்திரங்களாக வேடமிட்டு நடித்தனர். ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.