திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில்I திருப்புத்தூர் நின்ற நாராயணப் பெருமாள் கோயில்களில் ராம நவமி கொண்டாடப்பட்டது.
அவதாரப் புருஷரான ராமர் அவதரித்த தினமான ராம நவமியை முன்னிட்டு நேற்று காலை 11:00 மணி அளவில் மூலவர் ராமர்,சீதை,லெட்சுமணன், அனுமன் ஆகியோருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. திருப்புத்துார் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் காலை 10:00 மணி அளவில் ராமர்,லெட்சுமணன்,சீதை, விஷ்வத்சேனர் ஆகியோருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகளுடன தீபராதனை நடந்தது.