திருத்தங்கல் சக்தி மாரியம்மன் கோயில் முளைப்பாரி ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2022 07:04
சிவகாசி: திருத்தங்கல் சக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
திருத்தங்கல் சக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா 11 நாட்கள் நடந்தது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஒவ்வொரு நாளும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து பால்குடம் எடுத்து வந்தனர்.