நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் நாளையும் சித்திரை விஷூ கொண்டாடப்படுகிறது. தமிழ் காலண்டர் படி சித்திரை விஷூ இன்று கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நாகராஜா, கன்னியாகுமரி பகவதி அம்மன், மண்டைக்காடு பகவதி அம்மன், திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோயில் உள்ளிட்ட பெரும்பாலான கோயில்களில் இன்று சித்திரை விஷூ சிறப்பு பூஜைகள் மற்றும் கனி காணும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. மலையாள காலண்டர் படி சபரிமலை, குருவாயூர் உள்ளிட்ட கேரளாவின் அனைத்து கோயில்களிலும் சித்திரை விஷூ கொண்டாடப்படுகிறது. கேரள பஞ்சாங்க முறையை பின்பற்றி குமரி மாவட்டத்தில் பூஜைகள் நடைபெறும் சுசீந்திரம் தாணுமாலையர் சுவாமி கோயில் உள்ளிட்ட சில கோயில்களில் நாளை காலை சித்திரை விஷூ பூஜைகளும், கனி காணும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.