திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2022 03:04
திருமங்கலம்: திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தது.
காலை கணபதி ஹோமத்துடன் திருக்கல்யாண நிகழ்ச்சி தொடங்கியது. மீனாட்சி அம்மன், சொக்கநாதர் பிரியாவிடை, பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். மீனாட்சி சொக்கநாதருக்கு காலை 10:35 முதல் 11.59 மணிக்குள் திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கல்யாணத்தின் போது கோவில் உள்ளேயும் வெளியேயும் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் அமர்ந்திருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் புது மாங்கல்யம் மாற்றி கொண்டனர். சொக்கநாதராக சங்கரநாராயண பட்டரும், மீனாட்சி அம்மனாக பிரபு பட்டரும் இருந்து திருமண நிகழ்ச்சிகளை செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் சர்க்கரை அம்மாள் மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் நீர்மோர் வழங்கப்பட்டது.