பதிவு செய்த நாள்
15
ஏப்
2022
06:04
பல்லடம்: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, அவரப்பாளையம் செல்ல விநாயகர் கோவிலில், சித்திரை விழா கொண்டாடப்பட்டது.
பல்லடம் அடுத்த, அவரப்பாளையம் வெங்கடேஸ்வர நகர் ஸ்ரீசெல்வ விநாயகர் கோவிலில், சித்திரை விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம், மங்கை வள்ளி கும்மி ஆட்டம் நடந்தது. நேற்று அதிகாலை, கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. மதியம், 12.00 மணிக்கு மேல், மஞ்சள், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட திரவியங்கள், மற்றும் புனித நீரால் விநாயகருக்கு அபிஷேகம் நடந்தது. சித்திரையை வரவேற்கும் விதமாக, விநாயகருக்கு பல்வேறு வகையான பழங்கள் படைக்கப்பட்டன. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் அனைவருக்கும் விழா குழுவின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.