பரமக்குடியில் விசாலாட்சி சந்திரசேகர சுவாமி திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2022 06:04
பரமக்குடி: பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் திருக்கல்யாண விழா நடந்தது.
இக்கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, தினமும் சுவாமி, அம்பாள் வீதி வலம் வந்தனர். நேற்று காலை 10:00 மணிக்கு சந்திரசேகர சுவாமி, விசாலாட்சி அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு பூப்பல்லக்கு மற்றும் யானை வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதி வலம் வந்தனர். இன்று காலை 9:30 மணிக்கு சித்திரை தேரோட்டம் ரத வீதிகளில் நடக்க உள்ளது.
*இதனைத்தொடர்ந்து சுந்தரராஜ பெருமாள் கோயிலில் காலை சிறப்பு அபிஷேகங்கள் நடக்கிறது. தொடர்ந்து இரவு 2:00 மணிக்கு மேல் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் பூப்பல்லக்கில் இறங்க உள்ளார். நாளை காலை அழகர் குதிரை வாகனத்தில் அலங்காரமாகி ஆயிரக்கணக்கான பக்தர்கள் துருத்தி மூலம் மஞ்சள் நீரை பீச்ச உள்ளனர். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.