பழநி: பழநி ரெண காளியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா உற்சவம் சிறப்புடன் நடைபெற்றது. பழநி ரெண காளியம்மன் கோயில் திருவிழா உற்சவம் ஏப்.,5ல் தேதி கம்பம் சாட்டுதல் உடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் கம்பத்திற்கு பால், மஞ்சள் நீர் அபிஷேகம் செய்தனர். தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றது. ஏப்.,12ல் சக்தி கரகம் அழைத்தல், ஏப்., 13 ல் அம்மனுக்கு தங்க கவசம் அலங்காரம், வெள்ளி சிம்ம வாகனத்தில் திருத்தேர் உலா நடைபெற்றது. (ஏப்.,14) நேற்று முளைப்பாரி கொண்டுவருதல், சக்தி கரகம் கங்கை சென்றடைதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.