முத்துமாரியம்மன் கோயில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2022 06:04
ஆண்டிபட்டி: சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் விழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இக்கோயில் விழா ஏப்ரல் 5ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மன் சிம்ம வாகனம், அன்ன வாகனம், பூ பல்லக்கு. முத்துப் பல்லக்கில் சக்கம்பட்டி முக்கிய வீதிகள் வழியாக சென்று அருள்பாலித்தார். பக்தர்கள் தீச்சட்டி, பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று நடந்த நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்டவர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் நரசிம்மன் செய்திருந்தார்.