அசுவினி: பண்புடனும், அன்புடனும் பழகும் நீங்கள் இந்த புத்தாண்டில் தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படலாம். புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு மனத்துணிவு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். அரசியல்துறையினருக்கு காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை. பரிகாரம் குலதெய்வத்தை வணங்க பிரச்னைகளில் நல்ல தீர்வு கிடைக்கும்.
பரணி: அனைவரையும் கவர்ந்து இழுப்பதில் திறமை கொண்ட உங்களுக்கு இந்த புத்தாண்டில் எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் இருந்த தாமதம் நீங்கும். பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளை சமாளிக்க வேண்டி இருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகள் மூலம் டென்ஷன் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையில் வாக்குவாதங்கள் ஏற்படலாம். அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம். பெண்களுக்கு தெய்வபக்தி அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசியல்துறையினருக்கு எதையும் யோசித்து செய்வது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வியை பற்றி டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். பரிகாரம்: அஷ்ட லட்சுமியை வணங்கி வர மனோதைரியம் கூடும்.
கார்த்திகை 1: வாழ்க்கையில் முன்னேற்றமடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டு கடுமையாக உழைக்கும் உங்களுக்கு இந்த புத்தாண்டில் மற்றவர்களுடன் இருந்த பகை அகலும். பஞ்சமாதிபதி சூரியன் ராசியில் உச்சமாக இருப்பதன் மூலம் முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு கை கொடுப்பார்கள். மனதில் இருந்து வந்த சஞ்சல மனநிலையில் மாற்றம் இருக்கும். தர்மசிந்தனை உண்டாகும். பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் சீராக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த குழப்பங்கள் நீங்கும். நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு பணத்தேவை பூர்த்தியாகும். கலைத்துறையினருக்கு நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசியல் துறையினருக்கு வளர்ச்சி பெற மிகவும் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சக மாணவர்களின் ஒத்துழைப்பு மனதிருப்தியை தரும். பரிகாரம்: துர்கை அம்மனை தரிசனம் செய்து தீபம் ஏற்றி வர காரிய தடைகள் நீங்கும்.