கார்த்திகை 2, 3, 4 பாதம் எத்தனை இடையூறுகள் வந்தாலும் சமாளித்து காரிய வெற்றி காணும் உங்களுக்கு இந்த புத்தாண்டில் எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவிற்கு வருவீர்கள். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் டென்ஷனுடன் காணப்படுவார்கள். பணிச்சுமையால் அவதிப்பட நேரிடும். நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கிலேசங்களில் தெளிவான நிலை ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். நண்பர்கள் உறவினர்களிடம் நல்லுறவு நீடிக்கும். பெண்களுக்கு எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும். அரசியல் துறையினருக்கு உங்கள் வளர்ச்சியில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். தொண்டர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை ஏற்படும். டென்ஷனை குறைத்து பாடங்களில் கவனம் செலுத்தி படிப்பது நல்லது. வீண் பொழுது போக்குகளை தவிர்ப்பது நன்மையளிக்கும். பரிகாரம்: முருகனை தரிசித்து வர பாவம் நீங்கும். வாழ்க்கை வளமானதாக அமையும்.
ரோகிணி: தேனீ போல் சுறுசுறுப்பாக செயலாற்றும் நீங்கள் இந்த புத்தாண்டில் நிதானமாக எந்த முடிவையும் எடுப்பீர்கள். பணவரத்து மனமகிழ்ச்சியை தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்னை குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். சுக்கிரன் சஞ்சாரத்தால் வாக்கு வன்மையால் நன்மையை தரும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். தொழில்ரீதியான பயணங்கள் வெற்றியாக அமையும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு, வீண் அலைச்சல் குறையும். சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பெண்களுக்கு உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுக்கட்டைகள் அகலும். கலைத்துறையினருக்கு மற்றவர்களை திருப்தியடையச் செய்யும் வகையில் உங்களது செயல்கள் இருக்கும். அரசியல் துறையினருக்கு முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தலைமையின் ஆதரவுடன் சிலர் விரும்பிய பதவியை அடைவர். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் நீங்கும். எதிர்காலம் பற்றிய திட்டம் தோன்றும். ஆசிரியர்களின் உதவி கிடைக்கும். பரிகாரம்: நரசிம்மருக்கு தீபம் ஏற்ற கடன் பிரச்னை குறையும்.
மிருகசீரிடம் 1, 2 பாதம் ரத்த சம்பந்த உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உங்களுக்கு இந்த புத்தாண்டில் மற்றவர்களிடம் நல்ல பெயர் கிடைக்கும். வீண் பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும். பயணம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். கடித போக்குவரத்து நன்மை தரும். தொழில் வியாபாரம் தொடர்பான எந்த நெருக்கடிகளையும் சமாளிக்கும் தெம்பு வரும். புது வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் சுமையாக வரும். நிதானம் தேவை. சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள். குடும்ப விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவது கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும். பிள்ளைகளின் வளர்ச்சியில் அக்கறை உண்டாகும். பெண்களுக்கு அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கலைத்துறையினருக்கு முன்னேற்றம் சீரான பாதையில் இருக்கும். எடுத்த பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். அரசியல் துறையினருக்கு மேலிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். தொண்டர்களின் வகையில் பணம் செலவாகும். மாணவர்களுக்கு பதற்றம் கொள்ளாமல் நிதானமாக பாடங்களை படிப்பது நல்லது. சகமாணவர்களால் அனுகூலம் உண்டாகும். பரிகாரம்: காளியம்மனை வணங்க தீமை நீங்கும். மனதில் அமைதி பிறக்கும்.