சென்னை : சென்னை தீவுத் திடலில் நடைபெற உள்ள வெங்கடேச பெருமாளின் சீனிவாச கல்யாண உற்சவ விழா நாளை (16ம்தேதி) நடைபெறுகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னையில் தீவுத் திடலில் நாளை ஏப்ரல் 16-ம் தேதி மாலை 6 மணி முதல் சீனிவாச கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. திவுத்திடலில், சீனிவாச கல்யாண உற்சவ விழாவுக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்யாண உற்சவத்தை ஒரே நேரத்தில், 1.5 லட்சம் மக்கள் காணும் வகையில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீனிவாச கல்யாண உற்சவத்துக்காக ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சிலைகள் திருமலையில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.