Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம் : தமிழ் புத்தாண்டு பலன் மேஷம்: தமிழ்ப்புத்தாண்டு பலன்.. நிம்மதியான காலம் மேஷம்: தமிழ்ப்புத்தாண்டு பலன்.. ...
முதல் பக்கம் » தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2026 முதல் 13.4.2027 வரை)
மீனம் : தமிழ் புத்தாண்டு பலன்
எழுத்தின் அளவு:
மீனம் : தமிழ் புத்தாண்டு பலன்

பதிவு செய்த நாள்

15 ஏப்
2022
11:04

பூரட்டாதி 4ம் பாதம்: மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்காத தயாள மனம் கொண்ட உங்களுக்கு இந்த புத்தாண்டில் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தந்தை மூலம் செலவு உண்டாகலாம். அடிக்கடி வெளியூர்  பயணம் செல்ல நேரிடலாம். தாய் வழி உறவினர்களுடன் இருந்து வந்த தேக்க நிலை மாறும். நண்பர்கள்,  உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.  தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறைந்து வீண் அலைச்சலும் குறையும். ஆனால் பணியை பற்றிய  சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தில் திடீர் பிரச்னை தலைதுாக்கி பின்னர் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே கடந்த காலத்தில் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து ஒற்றுமை மேலோங்கும்.  உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். பெண்களுக்கு  தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமாக நடக்கும். கலைத்துறையினருக்கு அன்பும் பாசமும் அதிகரிக்கும். அரசியல் துறையினருக்கு விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். மாணவர்களுக்கு  கல்வியில் எதிர்பார்த்த  வெற்றி கிடைக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பர். கலை, விளையாட்டுத் துறையிலும் ஆர்வம் அதிகரிக்கும்.

உத்திரட்டாதி: அடுத்தவர் செய்யும் நற்காரியங்களுக்கு ஆதரவாக இருக்கும் உங்களுக்கு இந்த புத்தாண்டில் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் aஆரோக்கியம் மேம்படும். வீண் கவலை நீங்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த தடைகள் விலகும்.  மறைமுகப் போட்டிகள் குறையும்,  புதிய ஆர்டர்கள் பெறுவதற்கான தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான  அலைச்சல் குறையும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான  போக்கு காணப்படும்.  கணவன் மனைவிக்கிடையில் இருந்த  மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின்  எதிர்கால நலன் குறித்து கவலை உண்டாகலாம். பெண்களுக்கு வீண் செலவு குறையும். சிலர் விருப்பம் போல ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வர். கலைத்துறையினர் எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவார்கள். சக கலைஞர்களின் ஆதரவால் புதிய வாய்ப்பு கிடைக்கும்.  அரசியல் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். தலைமையின் ஆதரவால் சிலர் பதவி கிடைக்கப் பெறுவர்.  எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். மாணவர்களுக்கு கல்வியில்    இருந்த  முட்டுக் கட்டைகள் விலகும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் படிப்பர்.

ரேவதி: திட்டமிட்டு செயலாற்றுவதில் வல்லவரான உங்களுக்கு இந்த புத்தாண்டில் வரவேண்டிய நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். தந்தை மூலம் நன்மை உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவினை எடுப்பீர்கள். மனதில் இருந்த வீண் கவலைகள் நீங்கும்.  அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்கள் மூலம் நன்மை உண்டாகும். வியாபாரத்திற்கு தேவையான நிதி உதவியும் கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை நிறைவேற்றி நற்பெயர் காண்பர். தற்காலிக பதவி உயர்வு கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறலாம். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனக்குழப்பங்கள் தீரும். எதிலும் தெளிவான சிந்தனை இருக்கும். குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். உறவினர் மூலம் நன்மை உண்டாகலாம்.  பெண்களுக்கு மனகுழப்பம் நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுக்கும் மனநிலை ஏற்படும். பிள்ளைகளின் உதவி சரியான சமயத்தில் கிடைக்கும். கலைத்துறையினருக்கு ஓய்வில்லாமல் உழைக்க நேரும். அரசியல் துறையினருக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவர். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். கலை ஆர்வம் கூடும்.

 
மேலும் தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2026 முதல் 13.4.2027 வரை) »
temple news
மேஷம்: அசுவினி: யோக காலம்தைரிய காரகனான செவ்வாய், ஞானகாரகனாக கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, ... மேலும்
 
temple news
ரிஷபம்: கார்த்திகை: நல்ல காலம் வந்தாச்சுஆத்மக்காரகன் சூரியன் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
மிதுனம்: மிருகசீரிடம்: உழைப்பால் முன்னேறுவீர்கள்தைரிய, வீரிய, பராக்கிரமக்காரகனான செவ்வாயின் ... மேலும்
 
temple news
கடகம்: புனர்பூசம்: உழைப்பால் உயர்வுபொன் பொருள் புகழுக்கு காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
சிம்மம்: மகம்: நிதானம் அவசியம்ஞான மோட்சக்காரகனான கேது, ஆத்மக்காரகனான சூரியன் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar