ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் கேரளா மகாலிங்க கோஷச ரதயாத்திரையுடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
உலக அமைதி, மக்களிடம் ஆன்மீகம் வளர வேண்டிய கேரளா திருவனந்தபுரம் சேர்ந்த மகாலிங்கம் கோஷச ரதயாத்திரை பக்தர்கள் குழு ஒவ்வொரு ஆண்டும் சிவலிங்கத்துடன் உள்ள வாகனத்தில் 12 ஜோதிர்லிங்க தலங்களுக்கு யாத்திரை பயணம் செய்து தரிசிக்கின்றனர். அதன்படி 5வது ஆண்டாக ஏப்.,15ல் திருவனந்தபுரத்தில் இருந்து பக்தர்கள் ரத யாத்திரையாக புறப்பட்டு நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, குஜராத், உ.பி., உத்தரகாண்ட், ம.பி., மாநிலத்தில் உள்ள 11 ஜோதிர்லிங்க தலங்களில் தரிசிக்க பக்தர்கள் ரதயாத்திரை பயணத்தை துவக்கினர்.