திருவண்ணாமலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் கிரிவலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2022 07:04
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள், பக்தி பரவசத்துடன் அண்ணாமலையாருக்கு அரோகரா கோசத்துடன் கிரிவலம் செல்கின்றனர். கோவிட் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கோவிட் தொற்று குறைந்துள்ளதால், மாநில அரசு கோவிட் விதிகளை தளர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. சித்ரா பவுர்ணமி நாளான இன்று(ஏப்.,16) பக்தர்கள் கூட்டம் திருவண்ணாமலையில் அதிகமாக இருந்தது. கிரிவலம் செல்ல அனுமதிக்கப்பட்டதால், பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா கோசத்துடன் உற்சாகமாக கிரிவலம் சென்றனர்.