கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி: பக்தர்களுக்கு கேரளா கெடுபிடி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2022 08:04
கூடலுார், கேரள வனத்துறையினரின் வழக்கமான கெடுபிடிகளுடன் தமிழக - கேரள எல்லையில் கூடலுார் அருகே விண்ணேற்றிப்பாறை மலை உச்சியிலுள்ள மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நேற்று கொண்டாடப்பட்டது.
தேனி மாவட்ட நிர்வாகம் விழாவிற்கு ஏற்பாடு செய்தது. குமுளியிலிருந்து 14 கி.மீ., துாரம் கேரள வனப்பகுதி வழியாக தமிழக, -கேரள பக்தர்கள் ஜீப்பில் வந்தனர். முழுமையான சோதனைக்கு பின் பக்தர்களை கேரள வனத்துறையினர் அனுமதித்தனர்.கண்ணகி அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தமிழக பூசாரி சிறப்பு பூஜை நடத்தினார். மலர் வழிபாடு யாகபூஜை, மங்கல இசை, பொங்கல் வைத்தல், பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மணிமேகலை அட்சயப் பாத்திரத்தில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர் செய்தனர்.தேனி கலெக்டர் முரளிதரன், கேரளாவின் இடுக்கி மாவட்ட கலெக்டர் ஷீபா ஜார்ஜ் மற்றும் இரு மாநில அதிகாரிகள் பஙகேற்றனர்.