சின்னமனூர்: சின்னமனூர் பூலாநந்தீசுவரர் உடனுறை சிவகாமி அம்மன் தேரோட்டம் நேற்று மாலை நிறைவடைந்தது.
சின்னமனூர் பூலாநந்தீசுவரர் உடனுறை சிவகாமி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு துவங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த தேரோட்டத்தில் இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக நேற்று காலை 10 மணிக்கு செக்கா முக்கிலிருந்து விளம்பி கண்ணாடி கடை முக்கில நிறுத்தப்பட்டது. பின்னர் நேற்று மாலை 5 மணிக்கு தேர் இழுக்கப்பட்டு தெற்கு ரதவீதி மேற்கு ரத வீதிகள் வழியாக மாலை 6 10 மணிக்கு நிலை நிறுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டு தேருக்கு முன் நின்று ஓம் நமச்சிவாய என கோஷமிட்டனர். தேர்நிலை நிறுத்தப்பட்ட பின் சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், கம்பம், பெரியகுளம், கோம்பை, வீரபாண்டி உள்ளிட்ட பல ஊர்களில் தேரோட்டம் ஒரு நாள் மட்டுமே நடத்தப்படுகிறது. சின்னமனூரில் மட்டுமே இரண்டு நாள் தேரோட்டம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது தொடர்ந்து மண்டகப்படி நிகழ்ச்சிகள் ஏப்,24 வரை நடைபெறும்.