செஞ்சி: செத்தவரை மீனாட்சி உடனாகிய சொக்கநாதர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா செத்தவரை நல்லாண்பிள்ளை பெற்றாள் சிவஜோதி மோன சித்தர் ஆசிரமத்தில் உள்ள மீனாட்சி உடனாகிய சொக்கநாதர் கோவிலில் சித்திரை பெருவிழா கடந்த 12ம் தேதி அதிகாலை 4 மணிக்கு சிவஜோதி மோனசித்தர் தலைமையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று மாலை சிறப்ப பூஜை நடந்தது. 13, 14 மற்றும் 15ம் தேதிகள் சொக்கநாதருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு வேள்வி வழிபாடும், 10 மணிக்கு ஊஞ்சல் உற்வமும் நடந்தது. காலை 11 மணிக்கு சிவஜோதி மோனசித்தர் முன்னிலையில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பகல் 1 மணிக்கு சிவஜோதி மோனசித்தர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். விழாவை முன்னிட்டு நாள் முழுவதும் அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை சிவஜோதி மோன சித்தர் ஆசிரம டிஸ்டிகள், செயற்குழு உறுப்பினர்கள், சிவனடியார்கள், செந்தவரை, நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை உட்பட பல ஊர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.