பரமக்குடியில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2022 09:04
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அளித்தார். தொ
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு ஏப்., 16 அதிகாலை 3:45 மணிக்கு நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 9:30 மணிக்கு அழகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, இரவு 3:00 மணிக்கு வண்டியூர் பெருமாள் கோயிலை அடைந்தார். இன்று மாலை 5:00 மணிக்கு அழகர் சேஷ வாகனத்தில் அலங்காரமாகி, இரவு 8:00 மணிக்கு மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அளித்தார். பின்னர் இரவு 12:00 மணிக்கு தொடங்கி விடிய, விடிய தசாவதார சேவையில் காட்சி நடைபெறும். அப்போது காலை 6:00 மணிக்கு அழகர் மோகினி அவதாரத்துடன் விழா நிறைவடைந்தது. நாளை கருட வாகனத்திலும், நாளை ராஜாங்க திருக்கோலத்தில் கள்ளழகர் அருள்பாலிக்க உள்ளார் . ஏப்., 20 ல் அழகர் மீண்டும் பூப்பல்லக்கில் அலங்காரமாகி அன்று மாலை 6:00 மணிக்கு திருக் கோயிலை அடைகிறார். ஏற்பாடுகளை சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.