ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2022 09:04
ஆண்டிபட்டி: ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர்.
பழமையான இக்கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 8ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முதல் ஒரு வாரத்தில் கதலி நரசிங்கப்பெருமாள் அன்ன வாகனம், சிம்ம வாகனம், கருடன், ஆதிசேஷன் உட்பட பல்வேறு வாகனங்களில் உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மண்டகப்படி பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் ஸ்ரீதேவி, பூதேவியுடன் கதலி நரசிங்கப் பெருமாள் தேரில் எழுந்தருளினார். நேற்று மாலை நூற்றுக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் தீபாராதனை காட்டப்பட்டது. 18 கிராமங்கள் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து கோவிந்தா கோஷத்துடன் தேரை இழுத்தனர். மேற்கு தெரு சந்திப்பில் நிறுத்தப்பட்ட தேர் இன்று மாலை மீண்டும் இழுக்கப்பட்டு நிலை நிறுத்தப்படும். ஏற்பாடுகளை செயல் அலுவலர் தங்கலதா தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.