காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் விளக்கடி கோவில் தெருவில், துாப்புல் பரகால மடத்தில், லட்சுமி ஹயக்ரீவருக்கு என தனி சன்னிதி உள்ளது. இங்கு உலக நன்மைக்காகவும், மாணவ - மாணவியர் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறவும், கல்வி அபிவிருத்திக்காக கல்வி கடவுளான லட்சுமி ஹயக்ரீவருக்கு, சிறப்பு லட்சார்ச்சனை நேற்று நடந்தது.காஞ்சிபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில், மாணவ - மாணவியர் தங்களது பெற்றோருடன் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம், பிள்ளையபார்பாளையம் புதுப்பாளையம் தெருவில், பழமையான ருத்ரகோட்டீஸ்வரர் கோவில் உள்ளது. கோடி ருத்ரர்கள் வழிபட்டதால், இக்கோவில் ருத்ரகோடீஸ்வரர் என அழைக்கப்படுகிறது.சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்று முன்தினம் இரவு, ருத்ரகோடீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் மஹாதீப ஆராதனை நடந்தது.விழாவில், பிள்ளையார்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.