குன்றத்து கோயில் தேருக்கு புதிய உள் சக்கரங்கள் பொறுத்தும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2022 04:04
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான பெரிய வைரத்தேருக்கு 3 டன் எடையில் புதிய உள் சக்கரங்கள் பொருத்தும் பணி நேற்று துவங்கியது.
கோயில்முன்பு நிலை நிறுத்தப்பட்டுள்ள பெரிய வைர தேர் 40 டன் எடை கொண்டது. பங்குனி திருக்கல்யாணம் முடிந்து மறுநாள் அத்தேரில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருள கிராமத்தினர், பொதுமக்கள், பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர் கிரிவலப் பாதையில் வலம் வரும். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இத்தேர் வலம்வரும். 1990ல் தேரில் இருந்த 6 மர சக்கரங்களுக்கு பதிலாக வெளிப்பகுதியில் மட்டும் ஒன்னரை டன் எடை கொண்ட தலா 4 மெகா இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டது. தேரின் பாதுகாப்பு கருதி தேரின் உள்பகுதியில் மூன்று டன் எடை கொண்ட இரண்டு புதிய சக்கரங்கள் உள் பகுதியில் பொறுத்தும் பணி நேற்று துவங்கியது.