கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் பால்அபிஷேகம் நடந்தது. கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் உலக மக்கள் அமைதி பெற, 108 பால் குடங்களை ஏந்தி பெண்கள் ஊர்வலம் வந்தனர். பின்னர் சவுந்தர்ய ஞானாம்பிகை அம்மனுக்கு பால் அபிஷேகமும், தீப ஆராதனையும் நடந்தது.கோவில் தர்மகர்த்தா ரவிச்சந்திரன் நிகழ்ச்சி ஏற்பாட்டினை செய்திருந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.