திருநெல்வேலி: ஆடி செவ்வாய் கிழமையை முன்னிட்டு வண்ணார்பேட்டை பேராத்துச் செல்வி அம்மன் கோயிலில் பெண்கள் அதிக அளவில் அமபாளை வழிபட்டனர். ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகள் விஷேமானது என்பதால் அம்பாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுவும் பெண்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். நெல்லை வண்ணார்பேட்டை பேராத்துச் செல்வி அம்மன் கோயிலில் ஆடிச் செவ்வாய் கிழமையை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. மாலையில் சிறப்பு அலங்காரமும், அர்ச்சனைளும் நடந்தது. பெண்கள் எலுமிச்சம் பழங்களில் பசுநெய் மற்றும் நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபட்டனர். இதனால் பெண்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.