Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழகத்தில் இரண்டு சூரியன்கள்: ... பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்களின் கோவிந்தா கோஷங்களுடன் இருப்பிடம் சேர்ந்தார் கள்ளழகர்
எழுத்தின் அளவு:
பக்தர்களின் கோவிந்தா கோஷங்களுடன் இருப்பிடம் சேர்ந்தார் கள்ளழகர்

பதிவு செய்த நாள்

20 ஏப்
2022
04:04

மதுரை : மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்கள் மனம் குளிவித்த கள்ளழகர், கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் வளைதடி, நேரிகம்பு, வாள், சங்குசக்கரம் உள்ளிட்ட பஞ்சாயுதங்களுடன் தங்கப்பல்லக்கில் அழகர் மலைக்கு திரும்பினார்.

மதுரை வைகையாற்றில் இறங்கிய கள்ளழகர், பூப்பல்லக்கில் நேற்று அழகர்கோவிலுக்கு புறப்பட்டார். மழை பெய்து நீர்வளம், விவசாயம் செழிக்க வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்க, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்க, அழகர்கோவிலில் இருந்து கள்ளர் வேடம் பூண்டு தங்கப்பல்லக்கில் கள்ளழகர் ஏப்.,14ல் மதுரை புறப்பட்டார்.

ஏப்.,15 மூன்று மாவடியில் எதிர்சேவை, ஏப்.,16 கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். ஏப்., 17 தேனுார் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், மண்டூக முனிவருக்கு சாபம் அளித்தார். ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடந்தது. நேற்று அதிகாலை 3:45 மணிக்கு தல்லாகுளம் கருப்பண சுவாமி கோயில் அருகே ராமநாதபுரம் சேதுபதி மண்டகபடியில் பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளினார். மூன்று மாவடியில் இருந்து இரவு 7:00 மணிக்கு அழகர்மலைக்கு கள்ளழகர் புறப்பட்டார். இன்று (ஏப்.,20) அப்பன்திருப்பதி, கள்ளந்திரியில் எழுந்தருளிய பின் காலை கள்ளழகர் கோயில் சென்றடைந்தார். அழகரை ஏராளமான பக்தர்கள் பூக்களை தூவி கோவிந்தா கோஷமிட்டு வணங்கி வரவேற்றனர். சுவாமிக்கு பூசணிக்காய்கள் வைத்து தீபமேற்றி திருஷ்டி கழித்தனர். மேளதாளம் முழங்க, பக்தர்களின் கரகோஷங்களுடன் கள்ளழகர் இருப்பிடம் சேர்ந்தார். நாளை (ஏப்.,21) உற்சவ சாந்தி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவை மாவட்டம், அன்னூரில் 400 ஆண்டுகள் பழமையான கரி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; தமிழகம் கோயில்களின் நகரமாக திகழ்கிறது என நீண்ட தூர சைக்கிள் பயணம் மேற்கொண்டதாக கின்னஸ் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செப்பை சங்கீத உற்சவம் இன்று துவங்குகிறது.கேரள மாநிலத்தில் ... மேலும்
 
temple news
மைசூரு; கெல்லஹள்ளி கிராமத்தில் உள்ள அய்யப்ப பக்தர்கள், கொதிக்கும் எண்ணெயில் கை விட்டு அதிரசத்தை ... மேலும்
 
temple news
திருப்புவனம்; சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் சவுந்தரநாயகி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar