பதிவு செய்த நாள்
20
ஏப்
2022
04:04
பந்தலூர்: பந்தலூர் அருகே அம்மன் காவு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் விஷூ விளக்கு திருவிழா, கடந்த 3 நாட்களாக நடந்தது. நடைதிறப்பு மற்றும் சுத்தி கலச பூஜை, கணபதி ஹோமம், கொடியேற்றுதல், தொடர்ந்து செண்டை மேளப்ஆரம்பம் மற்றும் கொன்றை மலர்களை கொண்டு பூ ஏற்றுதல், தேங்காய் உடைத்தல், கை நீட்டம், கல்லேரி ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் இருந்து செண்டை மேளத்துடன், கோவிலுக்கு உண்டியல் மற்றும் பூமாலை ஊர்வலம், தீபாராதனை விளக்கு பூஜை மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மனின் அருள் வாக்கு, கோவிலுக்கு வாள் சேர்த்தல், காணிக்கை பெறுதல், ஆண்கள் பங்கேற்ற கோலாட்ட நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக அதிகாலை தேவி ஊர்வலம் மற்றும் நீராட்டும் நல்வாக்கு கேட்டல் நிகழ்ச்சியிலும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கோவில் திருவிழாவில் சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் பங்கேற்று, அம்மனின் ஆசி பெற்று சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.