Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உய்யவந்த அம்மன் கோயிலில் மகா ... தேவனாபுரத்தில் மாகாளியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தமபாளையம் பகவதி அம்மன் கோயில் திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2022
04:04

உத்தமபாளையம்: உத்தமபாளையம் பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. சக்தி கரகம் எடுக்கும் நிகழ்ச்சியிலும், மறுநாள் முல்லை பெரியாற்றில் கலக்கும் நிகழ்ச்சியிலும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்றனர்.

உத்தமபாளையம் வடக்குத் தெருவில் பகவதியம்மன் கோவில் உள்ளது. மிகவும் புராதனமான இந்தக் கோயிலில் சக்தி கரகம் எடுக்கும் நிகழ்ச்சி பிரசித்திபெற்றது. இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல் ஒன்றில் " ஊர் மெச்சும் உத்தமபாளையம் கரகம்" என்று பாடியுள்ளார். இந்த கோயில் திருவிழா ஏப். 12 ல் துவங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தினர் மண்டகப்படி நடத்தினார்கள். தினமும் எருமைக் கிடா ஒன்றை ஆற்றில் குடிப்பாட்டி ஊர்வலமாக அழைத்து வருவார்கள். பெண்கள் மஞ்சள் நீரை ஊற்றி மாலைகள் அணிவிப்பார்கள். ஏப். 19 ல் முல்லைப்பெரியாற்றில் சக்தி கரகம் எடுத்து கிழக்கு ரதவீதி, மேற்கு ரதவீதி வழியாக கோயில் சென்றடைந்தது. நள்ளிரவில் பெண்கள் மாவிளக்கு எடுத்தனர். முன்னதாக அக்னிசட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், உருண்டு கொடுத்தல் போன்ற நேர்த்திகடன்கள் பக்தர்களால் நிறைவேற்றப்பட்டது. நேற்று முன்தினம் இரவு எண்திசையிலும் காவு கொடுத்து, சக்தி கரகம் முல்லைப்பெரியாற்றில் கலக்கப்பட்டது. இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டு சக்தி கரகத்தை தரிசித்தனர். இப்பகுதியில் உள்ள பல கோயில்களில் சக்தி கரகம் எடுத்தாலும், இந்த கோயில் சக்திகரகம் விசேசமானது என்றும், வேண்டும் காரியங்கள் நிறைவேறும் என்றும் பக்தர்கள் கூறினார்கள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி காவிரி துலாக் கட்டத்தில் ஆதீனங்கள் உள்ளிட்ட ... மேலும்
 
temple news
அரியலூர் ; ஜெயங்கொண்டம் அருகே தேவாமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலய கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் துலா உற்சவத்தையொட்டி திருத்தேரோட்டம்; கொட்டும் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை ... மேலும்
 
temple news
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு விழா தற்போது அனைத்து பகுதி யிலும் சிறப்பான முறையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar