மேட்டுப்பாளையம்: தேவனாபுரத்தில் உள்ள மாகாளியம்மன் கோவிலில், 24ம் ஆண்டு திருவிழா நடந்தது.
மேட்டுப்பாளையம் அடுத்த, தேக்கம்பட்டி ஊராட்சி தேவனாபுரத்தில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை மாத திருவிழா கடந்த, 16ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து அக்னி கம்பம் நடுதல், படைக்கலம் அழைத்தலும், அம்மன் ஊர்வலமும் நடந்தது. அம்மன் சுவாமிக்கு பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான அக்னிச்சட்டி எடுத்தலும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மாவிளக்கு எடுத்தும் ஊர்வலமாக வந்து, அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர். அப்போது பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து கும்மியடித்து அம்மனை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.