பதிவு செய்த நாள்
25
ஜூலை
2012
11:07
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி மங்கை மஹால் திருமண மண்டபத்தில் ஸ்ரீ ராதா கல்யாணம், பஜனைகள் சம்பிரதாயப்படி நேற்று முன்தினம் வெகு விமரிசையாக நடந்தது. முதல்நாளில் காலை அஸ்டபதி ஆரம்பித்து, ஸ்ரீ ராமர் கோவிலிருந்து ஸ்வாமி மாப்பிள்ளை அழைப்பு, இன்னிசை முழங்க ஊர்வலமாக ஸ்ரீ ராதாகிருஷ்ணன் ஸ்வாமி அலங்கரிக்கப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக நாமஸங்கீர்த்தனம் பாடல்களை இசைத்துகொண்டு ஊர்வலம் மண்டபத்தை வந்தடைந்தது.இரவில், திவ்ய ராமபஜனை நடந்தது. மறுநாள் காலை உஞ்சவிருத்தி, மாலைமாற்றுதல், ஊஞ்சல் வைபவம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, மதியம் ஸ்ரீ ராதாகல்யாண திருமாங்கல்யதாரணம் நடந்தது. இதில், தெய்வீக வேடமணிந்து, குழந்தைகள் நடித்துக்காண்பித்தனர். அதைத்தொடர்ந்து, ஸ்ரீ ஆஞ்சநேயர் உற்சவ நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது. இதை சென்னை கோபாலசுந்தரம் பாகவதர் குழுவினர் நடத்தி வைத்தனர்.ஏற்பாட்டை திருத்துறைப்பூண்டி ஸ்ரீ பாண்டுரங்க பஜன் மண்டலி சார்பில் துளசிதாஸ் செய்திருந்தார். இதில், பக்தர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு வழிபட்டனர்.