மகிழ்ச்சியாக இருக்கும் வாழ்வில் திடீரென சில சிரமங்கள் வருவதுண்டு. அதனால் பலரும் சட்டென துவண்டு விடுகிறோம். அதை எதிர்கொள்ள சிலரால் மட்டுமே முடிகிறது. வாழ்க்கை என்றால் ஆயிரம் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். வாடிநின்றால் மட்டும் பிரச்னை தீர்ந்துவிடுமா... என்ன. அதை எதிர்கொள்ளும் வகையில் மனதை தயார் செய்யுங்கள். இது கஷ்டமாகத்தான் இருக்கும். இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். சோதனை என்பது இறைவன் தரும் பரிசு.