ராமேஸ்வரம்: தங்கச்சிமடம் வேர்க்காடு சந்தியாகப்பர் ஆலய திருவிழா கடந்த 16ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 9 நாட்கள் நவநாள் திருப்பலி, மறையுரையும் நடந்தது. திருவிழாவின் 9வது நாள் தேர்பவனி பெருவிழா நடந்தது. இதையொட்டி தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவான் அம்புரோஸ் தலைமையில் திருத்தலப் பெருவிழா சிறப்பு திருப்பலி நடந்தது. பாதிரியார்கள் அமலதாஸ், சகாயராஜ், ஜேம்ஸ் அந்துவான், அற்புதராஜ், செங்கோல்வேதமாணிக்கம் சேசுராஜா, ஆரோக்கிய புனிதன், கிளமென்ட் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரவு 9 மணிக்கு சந்தியாகப்பர் தேர்பவனி நடந்தது. ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று மாலை 5 மணிக்கு விழா கொடியிறக்கம், நடைபெற்றதை தொடர்ந்து நடந்த நிறைவுத்திருப்பலி மற்றும் நற்கருணை ஆசிர் நிகழ்ச்சியில் பாதிரியார் உட்பட பலர் பங்கேற்றனர்.