காரைக்கால்: காரைக்காலில் கடைத்தெரு மகா மாரியம்மன் கோவிலில் மாரியம்மன் புஷ்பபல்லாக்கில் வீதியுலா நடைபெற்றது.
காரைக்கால் கடைத்தெரு மகா மாரியம்மன் கோவிலில் 42ம் ஆண்டு தமிழ்புத்தாண்டு திருவிழா கடந்த 13ம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. கடந்த 10 நாட்களாக நடைபெற்ற திருவிழாவில் முன்னிட்டு திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. நேற்று மாரியம்மனுக்கு வெண்ணெய்த் தாழி அலங்காரத்தில் சிறப்பு தீபாரதனை நடந்தது.பின் மாரியம்மன் புஷ்பபல்லாக்கி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.