காரைக்கால்: காரைக்காலில் ஸ்ரீ வேம்படி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
காரைக்கால் மதகடி சாலையில் உள்ள ஸ்ரீ வேம்படி மாரியம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதால் தினம் சுற்றுலாபயணிகள் மற்றும் பொதுமக்கள் வேம்படி மாரியம்மனை தினம் தரிசனம் செய்கின்றனர். இக்கோவிலில் சித்திரை மாதத்தை முன்னிட்டு 27ம் ஆண்டு திருவிழா தொடங்கியது.இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான இன்று வேம்படி மாரியம்மனுக்கு அபிேஷகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.பின்னர் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி மிகவிமர்ச்சியாக நடைபெற்றது. இதில் வேம்படி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.இதில் ஏராளமான பக்தர்கள் பலர் கலந்து கொண்டு மாரியம்மனை வழிப்பட்டனர்.